This page lists books authored and translated by me, covering Indian history, Tamil literature, and cultural traditions. The works are based on primary sources such as inscriptions, literary texts, and historical record
The Cholas

Oxygen Books
This book examines the political, economic, and cultural history of the Chola dynasty, drawing extensively from inscriptions, literary sources, and archaeological evidence. It situates the Cholas within a broader Indian Ocean world and challenges several popular misconceptions about their rule.
Gupta Empire

Oxygen Books
The Gupta Empire, with Pataliputra as its capital, was an epicenter of political stability and cultural efflorescence. The empire was ruled by visionary monarchs such as Samudragupta, known for his military conquests and patronage of the arts, and Chandragupta II, whose reign was a period of consolidation and cultural achievements. The book delves deep into this illustrious period, drawing from a wealth of historical evidence, including coins, inscriptions, copper plates, and archaeological findings.
விஜயநகரப் பேரரசு

தமிழகத்தைச் சுமார் 200 ஆண்டுகள் ஆட்சி செய்து தங்கள் முத்திரையை வலுவாகப் பதித்துவிட்டுச் சென்றிருக்கிறது விஜயநகரப் பேரரசு. 14ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் உதயமான இந்தப் பேரரசுக்கு மற்ற அரசுகளுக்கு இல்லாத ஒரு பெரும் கடமை இருந்தது. அது, தென்னாட்டைப் பெரும் சீரழிவிலிருந்து மீட்கும் பணி. நிலையற்ற அரசும் கொந்தளிப்பான தன்மையும் நிலவிய மோசமான சூழலிருந்து நாட்டை மீட்டுச் செம்மைப்படுத்தினார்கள் விஜயநகர மன்னர்கள். நிர்வாகச் சீர்திருத்தங்கள், பொருளாதார மேன்மை, நீர்ப்பாசனம் என்று தொடங்கி அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவந்ததன்மூலம் தென்னகத்தை அவர்கள் தலைநிமிரச் செய்தார்கள். புத்தகத்தை வாங்க
தமிழ்நாட்டுப் போர்க்களங்கள்

பண்டைய காலம் முதல் நவீன காலம் வரையிலான தமிழகத்தின் கதையைப் போர்களின்மூலம் தெரிந்துகொள்ள உதவும் ஒரு வரலாற்று வழிகாட்டி இந்நூல். தலையாலங்கானம், தகடூர், மதுரை, நெல்வேலி, காந்தளூர்ச்சாலை, பெருவளநல்லூர், திருப்புறம்பியம் என்று அடுத்தடுத்து பல போர்க்களங்கள் நம் முன்னால் விரிகின்றன. சங்க காலம் தொடங்கி ஐரோப்பியரின் வருகைக்குச் சற்று முன்பு வரையிலான போர்க்களங்களை நம் கண் முன்னால் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.
மதுரை நாயக்கர்கள்

தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொன்மையை உடைய நகரம் மதுரை. பாண்டியர்களின் தலைநகராக சங்க காலம் தொட்டு திகழ்ந்து வந்த மதுரை, களப்பிரர்களாலும் இடைக்காலப் பாண்டியர்களாலும் சோழர்களாலும் விஜநயகரப் பேரரசாலும் ஆளப்பட்ட பிறகு, சுமார் இரு நூற்றாண்டுகள் மதுரை நாயக்கர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இந்நூல் அந்த இரு நூற்றாண்டுகளின் வரலாறு.
சீக்கியர்கள்

கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த குரு நானக்கால் தோற்றுவிக்கப்பட்ட இந்த மதத்தைப் பத்து சீக்கிய குருக்கள் வளர்த்தெடுத்துள்ளனர். இந்து மதம், இஸ்லாம் என்னும் ஒரு பெரும் சவால்களை எதிர்கொண்டு பிரமாண்டமான வளர்ச்சியைப் பெற்ற மதம் சீக்கியம். புனித நூல், தனித்துவமான வழிபாட்டு முறை, சமயச் சடங்குகள், நம்பிக்கைகள், அடையாளங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் சீக்கிய மதம் இன்று உலகின் ஐந்தாவது பெரிய சமயமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. அவர்களின் வரலாற்றைப் பற்றிய ஒரு தொகுப்பை அளிக்கிறது இந்தப் புத்தகம்
பண்டைய இந்திய நாணயங்கள்

நாணயங்களின் வரலாறு மிகத் தொன்மையானது. ஆரம்பத்தில் பண்டமாற்றுக்குப் பதிலாக நாணயங்கள் பயன்படுத்தப்பட்டாலும், காலப்போக்கில் அவை வரலாற்றுச் சின்னங்களாகவும், அரசர்கள் மற்றும் தெய்வங்களின் பெருமைகளைப் பறைசாற்றும் முத்திரைகளாகவும் நிலைபெற்றன. அப்படி சிறப்புப் பெற்ற பண்டைய இந்திய நாணயங்களைப் பற்றிய சுவாரசியமான தொகுப்பு இந்தப் புத்தகம்.
சேர,சோழ,பாண்டிய,பல்லவர் காலக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும்

கல்வெட்டுகளும் செப்பேடுகளும் அக்கால வரலாற்றைப் படம்பிடித்துக் காண்பிக்கும் சித்திரங்களாக இருக்கின்றன. அப்படிப்பட்ட சாசனங்கள் சிலவற்றின் தொகுப்பு இந்தப் புத்தகம்.
